Main

Reviews

Scenes

Songs

Awards

Shooting Spot

Posters

Parthiban Kanavu | Review


Parthipan (Srikanth) is a happy-go-lucky guy. He hates to take responsibilities and does not stick to any job for more than two months. His parents are worried about him and they want him to get settled by getting married.

One day he meets a girl (Sneha) on the road and it is love at first sight for him. He likes her attitude, and along with his friends he follows her without her knowledge and learns all about her likes and dislikes.

Meanwhile Parthi’s parents fix his marriage to a girl and much to his surprise he realizes that it is the same girl whom he was following. Her name is Satya (Sneha), daughter of a businessman (Manivannan). Parthi’s happiness has no bounds and he gets married to Satya.

But after the wedding as the couple proceed to their house; Parthi is shocked to see the girl whom he had admired and followed, who looks exactly like Satya !

On reaching home, Parthi finds that Satya is a homely girl and her interest are totally different from what he expected in his wife. He tries to trace the whereabouts about the girl whom he admired and learns that she is Janani (Sneha), an outgoing smart girl. Janani comes to stay opposite Parthi’s and Satya’s flat. What happens next?

Srikanth and Sneha make a perfect pair on screen and Sneha excels in both the roles. Director Karu Palaniappan deserves credit for making the characters of Satya and Janani look entirely different in their looks and body language. Srikanth has given a matured performance and is getting better with each film. Vivek’s comedy for a change is a part of the narration and he is responsible for the twist in the climax.

However the highlight of the film is the melodious music tuned by Vidyasagar. There is a song Ye Maadapura in a dream sequence, which starts in black and white era of K.V.Mahadevan, then becomes technicolour with M.S.Viswanathan’s tune and finally Eastman colour with Ilayaraja and ends in the present period of fast music by Vidyasagar. Palaniappan has done a decent job and has not compromised on any commercial elements. This film is infinitely more watchable than the recent crop of mindless love stories.

 

Courtesy : nanjilonline.com

 


பார்த்திபன் கனவு ஒரு பாஸிட்டிவான கனவு

 

அடிதடி, ரத்தம், என்று கசாப்பு கடைக்குள் சிக்கிக் கொண்ட தமிழ்சினிமாவை மீட்டு அழகான சோலைக்குள் இட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன். படம் முழுக்க பாஸிட்டிவ் அப்ரோச்! இன்னொரு விக்ரமன் என்று இவரை தலைமேல் வைத்து கொண்டாடப் போகிறது தமிழ்சினிமா.

பஸ் ஸ்டாண்டில் பார்க்கும் சினேகாவை மனசுக்குள் காதலிக்கிறார் ஸ்ரீகாந்த். பெற்றோர்களின் வற்புறுத்தலால் பெண் பார்க்கப் போகும் அவருக்கு பஸ் ஸ்டாண்டில் பார்த்த சினேகாவே மணப்பெண் என்றால் எப்படியிருக்கும்? திருமணமாகி மாலையும் கழுத்துமாய் காரில் புதுக்குடித்தனம் போகும் நேரத்தில் எதிரே சாலையை கிராஸ் பண்ணுகிறார் ஸ்ரீகாந்த் காதலித்த அதே சினேகா. கனவுகள் டமால் ஆகிவிட, கைப்பிடித்த சினேகாவை விட்டு விட்டு காதலித்த சினேகாவை தேடுகிறார். தேடிப்போனவள் எதிர் வீட்டிற்கே குடி வந்துவிட... எச்சில் விழுங்கி ஈரல் குலையில் தத்தளிக்கிறது ஸ்ரீகாந்தின் காதல்! அப்புறம் என்னாச்சு... என்ற படபடப்பு வினாடிக்கு வினாடி ஏறிக்கொண்டிருக்க எல்லாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவுடன் வணக்கம் போடுகிறார்கள்.

படிய சீவிய தலையும், பவர் கிளாசும் புது அழகை கொடுக்கிறது ஸ்ரீகாந்துக்கு. காதல் காட்சிகளில் அந்த கால கமலை பார்ப்பது போல் இருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் முத்துராமன், கமல் போன்ற சாயல்களில் அவர் ஆடும் நடனம் அழகு. இரண்டு சினேகாக்களில் யாரை இழப்பது என்ற குழப்பத்தையும் தவிப்பையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இரட்டை வேடங்கள் சினேகாவிற்கு. ஆர்பாட்டமாக ஒருவர். அடக்கமாக இன்னொருவர். நீங்க அழகா சிரிக்கிறீங்க.... இப்படி மாற்றி மாற்றி சொல்லிக் கொள்கிறார்கள் இருவரும். நிஜம்தான்! சிரிப்புதான் ஒன்றே தவிர நடிப்பில் இரண்டு சினேகாவையும் வேறாக்கி காட்டியிருக்கிறார். சினேகாவுக்கு இந்தப்படம் டபுள்(ஆக்ட்)பிரமோஷன்!

ஜனங்களில் கலைஞன் விவேக், தன் அட்வைஸ் ஆறுமுகம் வேலையை மூட்டை கட்டி வைத்திருக்கிறார். நன்றி. ரிட்டையராக போகும் மாமனாருக்கு மாலை வாங்க போகும் விவேக், பணத்தை மிச்சப்படுத்த நினைத்து பிணத்தின் கழுத்தில் இருக்கும் மாலையை கழற்றிக் கொண்டு போவதும் பிறகு மனைவியிடம் மாட்டிக் கொள்வதும் தியேட்டரை துவம்சமாக்கும் காமெடி. அதுமட்டுமா.... முதல் மரியாதை சிவாஜி கெட்டப்பில் வந்து, ஜிஞ்சர் குடித்து சரி செய்யும் அளவிற்கு வயிற்றில் பஞ்சர் போடுகிறார்.

பாடல்கள் ஒவ்வொன்றிலும் இயக்குனரின் ரசனையும், பாடலாசிரியர்களின் வரிகளும், நடன இயக்குனரின் பங்கும் கைகோர்த்து கம்பீர நடை போடுகின்றன. குறிப்பாக ஆலங்குயில் பாடல்! அந்த முதல் பாடல் மட்டும் மூச்!

மணிவண்ணன், உள்ளிட்ட படத்தில் இடம் பெற்ற எல்லா கலைஞர்களுமே நம் அண்டை வீட்டுக்காரர்கள் என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டு போகிறார்கள்.

தறி கெட்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமா குறித்து, கவலையில் இருப்பவர்களுக்கு இந்த பார்த்திபன் கனவு ஒரு பாஸிட்டிவான கனவாக இருக்கும் என்பது மட்டும் உறுதி!

-ஆர்.எஸ்.அந்தணன்.

 

Courtesy : tamilcinema.com

 

50 years of Tamil Cinema

Newsletter

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

© 2011 Director Karu Palaniappan. All Rights Reserved

Designs - Purple Rain Media Solutions